Samarvel Arulin Isai

ஐயப்பன் வழிநடை சரணங்கள்

சுவாமியே ஐயப்பா – ஐயப்பா சுவாமியே
பகவானே பகவதியே – பகவதியே பகவானே
தேவனே தேவியே – தேவியே தேவனே
வில்லாளி வீரனே – வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே – வில்லாளி வீரனே
பகவான் சரணம் – பகவதி சரணம்
பகவதி சரணம் – பகவான் சரணம்
தேவன் சரணம் – தேவி சரணம்
தேவி சரணம் – தேவன் சரணம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு – சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
பாத பலம்தா – தேக பலம்தா
தேக பலம்தா – பாத பலம்தா
கல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை – கல்லும் முள்ளும்
குன்றும் குழியும் – கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் – குன்றும் குழியும்
தாங்கி விட்டப்பா – ஏந்தி விட்டப்பா
ஏந்தி விட்டப்பா – தாங்கி விட்டப்பா
தூக்கி விட்டப்பா – ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் – தூக்கி விட்டப்பா
சாமி பாதம் ஐயப்பன் பாதம் – ஐயப்பன் பாதம் சாமி பாதம்
யாரைக்காண – சாமியை காண
சாமியை கண்டால் – மோட்சம் கிட்டும்
கற்பூர ஜோதியே – சுவாமிக்கே
நெய் அபிஷேகம் – சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் – சுவாமிக்கே
முத்திரத் தேங்காய் – சுவாமிக்கே
காணிப்பொன்னும் – சுவாமிக்கே
வெற்றிலை அடக்கம் – சுவாமிக்கே
கதம்பப்பூவும் – சுவாமிக்கே
விபூதி அபிஷேகம் – சுவாமிக்கே
கட்டுக்கட்டு – இருமுடிக்கட்டு
யாரோடு கட்டு – சாமியோட கட்டு
சாமிமாரே -ஐயப்பமாரே.
ஐயப்பமாரே- சாமிமாரே
பம்பா வாசா – பந்தள ராஜா
பந்தள ராஜா – பம்பா வாசா
சாமி அப்பா ஐயப்பா – சரணம் அப்பா ஐயப்பா
வாரோம் அப்பா ஐயப்பா – வந்தோம் அப்பா ஐயப்பா
பந்தள ராஜா ஐயப்பா – பம்பா வாசா ஐயப்பா
சபரிமலை வாசா ஐயப்பா – கலியுக வரதா ஐயப்பா

Scroll to Top